பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் சேரன் மற்றும் பங்குபெறுவோர் பட்டியல்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஜூன் 23 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.
இம்முறையும் விஜய் தொலைக்காட்சியே அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருக்கிறது.
அதேபோல் கமல்தான் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார்.
ஜூன் 23 அன்றுதான் அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பதை அறிவிப்பார்கள்.
இந்நிலையில் அதில் பங்குபெறுவோர் பற்றிய தகவல்கள் கசிந்திருக்கின்றன.
பாத்திமா பாபு, லோஸ்லியா, துள்ளுவதோ இளமை ஷெரின், பவர் ஸ்டார் சீனிவாசன், டிவி நடிகர் கவின், நேர்கொண்டபார்வை புகழ் அபிராமி, மோகன்வைத்யா, முஜல்ராவ் ஆகியோரோடு இயக்குநர் சேரன் ஆகியோர் பங்குபெறுகிறார்கள்.
இவர்கள் மட்டுமின்றி நடிகர் ராதாரவி , நடிகை ஶ்ரீரெட்டி உள்ளிட்ட சிலரும் பங்குபெறவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.











