தமிழ்த்திரையுலகில் கடந்த நாற்பதாண்டுகளாக முக்கியப் புள்ளியாக இருந்து கொண்டிருப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். திரையரங்கு உரிமையாளர், திரைப்பட விநியோகஸ்தர் ஆகிய அவர், விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களில் பொறுப்பு வகித்தவர். அண்மையில்,தென்னிந்திய
செய்திகள்
நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு வெளியான உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானார்.அறிந்தும் அறியாமலும், பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு 38 வயது ஆகிறது. இந்த நிலையில் கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தபோது ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில்
இளையராஜா 75 கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்த் திரையுலகம் சார்பாக இளையராஜா 75 நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது. இளையராஜாவுக்குச் சிறப்புச் சேர்க்கும் விதமாக பாடலாசிரியர் கவிஞர் கபிலன் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளியாகியுள்ள கவிதை….. ஒன்பது துளைகள் கொண்ட மனிதப் புல்லாங்குழல் நீங்கள் தூண்டில்போட்டு முத்தெடுத்தவர் அல்லர் கரையைக் கடக்க கடலையே குடித்தவர்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் மே 1 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்து இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ
பேட்ட படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் பத்தாம்
ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கும் காஞ்சனா 3 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தப்படம் முதலில் ஏப்ரல் 18 அன்று வெளியாகும் என்று சொல்லப்பட்டது. அதன்பின் ஏப்ரல் 12 அன்றே வெளியாகும் என்று சொன்னார்கள். இப்போது அதிலும் மாற்றம் வந்திருக்கிறதாம். அந்தப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதம் முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் இருக்கும் என்பதால் இந்த மாற்றம்
சிம்புவும், ஹன்சிகாவும் விஜய்சந்தர் இயக்கத்தில் வெளியான வாலு படத்தில் ஒன்றாக நடித்தவர்கள்.இருவரும் காதலித்து பிரிந்தவர்கள். இந்நிலையில் மீண்டும் ஹன்சிகா சிம்பு ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். ஹன்சிகாவின்ஐம்பதாவது படம் மஹா. லக்ஷ்மண் இயக்கிய ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இந்தப் படத்தை
சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத், அஜீத்தின் 59 ஆவது படத்தை இயக்கிவருகிறார். அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப்படம் ‘பிங்க்’. அந்தப்படத்தின் தமிழாக்கம்தான் இந்தப்படம். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்துவருகிறது. நிரவ்ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர் ராஜா
கே.சி.சுந்தரம் என்பவரது இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இப்படத்துக்கு ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் இன்று காலை (மார்ச் 4,2019) நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும்
கெளதம்மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா விரைவில் வெளியாகவிருக்கிறது. தனுஷ் இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் அசுரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குப் போவதற்கு முன், இன்னொரு புதிய படத்தின் படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறாராம் தனுஷ்.





















