இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் கதிர் மற்றும் பிரபு ஆகியோரில் பிரபு நல்லவன் கதிர் கெட்டவன். பெற்ற் அப்பாவையே கொல்லும் கதிரை தனியே விட்டுவிட்டு பிரபுவுடன் வெளியூர் போய்விடுகிறார் அவர்களுடைய தாய். சென்னையில் ஒருவர் வட இந்தியாவில் ஒருவர் என வளரும் அவர்கள் இருவரும் கால்நூற்றாண்டுக்குப் பின்
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர்
மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியிருக்கும் கலகத்தலைவன் படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது. அதற்கடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார் உதயநிதி. அவர் தீவிர அரசியலிலும் இருந்துவருவதால் மாமன்னன் படம்தான் அவர் நடிக்கும் கடைசிப்படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், நெஞ்சுக்குநீதி வெற்றிவிழாவில் பேசும்போது,
பல ஆண்டுகளாக வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானம் இப்போது, பிரபல நிதியாளரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை
தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள நானே வருவேன் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.அப்படம் தொடர்பான செய்திகள் மற்றும் அப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தனுஷ் ஈடுபட்டுள்ளார். அதேநேரம்,தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுங்கோபத்தில் இருக்கிறாராம் தனுஷ். ஏன்? தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி,
இயக்குநர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள காபி வித் காதல் படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி
மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள கலகத்தலைவன் திரைப்படம் நவம்பர் முதல்வாரத்தில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அப்படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. இதற்கடுத்து உதயநிதி, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படத்தை கிடாரி பட
இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளராக இருந்த மருத்துவர் ஐபி.முருகேஷ் முதன் முறையாக இயக்கும் படம் “மலை”. இந்தப்படத்தில் இலட்சுமி மேனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லெமன் லீஃப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் சார்பில் ஆர்.கணேஷ் மூர்த்தி சௌந்தர்யா, மலை படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நாடகங்களில் பபூன் எனப்படும் கோமாளி வேடம் போடும் வைபவ், நாடகக் கலை நலிந்து வருவதால் அத்தொழிலை விட்டு வெளிநாடு போய்ப் பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். வெளிநாடு செல்வதற்கான பணம் சேர்க்க ஓரிடத்தில் சுமையுந்து ஓட்டுநர் பணிக்குச் செல்கிறார். உப்பென்று நினைத்து அவர் ஓட்டிவந்த சுமையுந்தில் போதைப்பொருள் இருக்கிறது. அதன்பின் அவர் வாழ்க்கையில் பல திருப்பங்கள். அவற்றையெல்லாம் எப்படி
அநாதைகளைப் பற்றி நினைக்க யாருக்கும் நேரமில்லை எனவே அவர்களை வைத்து நான் பெரிய வியாபாரம் செய்யப்போகிறேன் என்று கிளம்புகிறார் ஒருவர். அவருடைய எண்ணத்தில் இடியாய் இறங்குகிறார் ஒரு காவல்துறை அதிகாரி. துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா போல் ஆக்ரோசமாகப் பாயும் அந்தக் காவல் அதிகாரியை வில்லன் எப்படி எதிர்கொள்கிறார்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கும் படம்





















