உதயநிதி பட இயக்குநருக்கு கமல் நெருக்கடி – மற்றுமோர் சுவாரசிய தகவல்
மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள கலகத்தலைவன் திரைப்படம் நவம்பர் முதல்வாரத்தில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அப்படத்தைத் தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
இதற்கடுத்து உதயநிதி, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
அப்படத்தை கிடாரி பட இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கவிருக்கிறார்.
அவர் இப்போது, அதர்வா நடிக்கும் ஓர் இணையத் தொடர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட குயின் இணையத் தொடர் ஆகிய இரண்டு தொடர்களின் வேலைகளில் இருக்கிறாராம்.
அவரிடம், உதயநிதி தயாராகிவிட்டார் எனவே உடனே படப்பிடிப்பைத் தொடங்கும் வேலைகளைப் பாருங்கள். டிசம்பரில் கிறிஸ்துமசையொட்டி படத்தின் அறிவிப்பை ஒரு டீசராக வெளியிட்டுவிட்டு அப்படியே படப்பிடிப்பைத் தொடங்குங்கள் என்று ராஜ்கமல் நிறுவனத்திலிருந்து நெருக்கடி கொடுக்கப்படுகிறதாம்.
அதோடு அடுத்து வரும் குயின் இணையத்தொடரில் உங்கள் பெயரைப் போடவேண்டாம் என்றும் சொல்கிறார்களாம்.
இவற்றால் கடுப்பாகியுள்ள இயக்குநர் பிரசாந்த்முருகேசன்,உதயநிதி படத்துக்கான திரைக்கதையே இன்னும் இறுதியாகவில்லை அதற்குள் இப்படியெல்லாம் சொல்கிறார்களே என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம்.
அப்புறம் இன்னொரு சுவாரசியத் தகவல்…
இந்தப்படத்தின் கதை, மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை மையப்படுத்தி எழுதப்படுகிறதாம். அதற்காக மிசா சிறைவாசிகளைச் சந்தித்து உரையாடிக்கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.
அப்படியானால், மு.க.ஸ்டாலினாக நடிக்கவிருக்கிறார் உதயநிதி.











