திகட்டத் திகட்ட ஒரு காதல் அதன்பின் திருமணம் அதற்குப் பின் கணவன் மனைவி சண்டை எனப்போனால் அது ஏற்கெனவே வந்த கதையாகிவிடும். எனவே அதனுடன் ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்குமான மோதலை வைத்து அதன் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சேர்த்து புதியதாக்கிக் குஷி படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷிவநிர்வானா.
உறவுகளின் மேன்மைகள் பேசிப்பேசித் தீர்பவை அன்று வளர்ந்து வளர்ந்து நெக்குருக வைப்பவை. அவற்றைக் கையாள்வதில் தேர்ந்தவர் தங்கர்பச்சான். இந்தப்படத்திலும் அந்த மாயத்தை நிகழ்த்தி நெகிழ வைக்கிறார். அவருக்குத் தோதாக பாரதிராஜா, கவுதம்மேனன், யோகிபாபு, அதிதிபாலன், சாரல் ஆகியோர் அமைந்திருக்கிறார்கள். பொருளியலில் உச்சாணியில் இருக்கும் பாரதிராஜாவும் அதைத்தேடி ஓடிக்கொண்டிருக்கும்
மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி, தனியார் கைகளுக்குச் சென்று முழுக்க முழுக்க வியாபாரமானதால் நாட்டில் பல சிக்கல்கள். அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கும் போக்கைத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள். அவற்றிற்கான எதிர்வினைகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது ரங்கோலி. திரைப்படத்தயாரிப்பாளர்
மிக மேலான பண்புகளைக் கொண்டு, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும், எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்தான் பரம்பொருள்.ஆனால் இந்தப் பெயரில் வந்திருக்கும் படம் சொல்லும் பொருள் வேறு. சிலை கடத்தல் சீசனா? இது. இந்தப்படத்திலும் சிலைதான் மையம். பெரும்பொருள் தரும் ஐம்பொன் சிலையைக் கடத்திப் பணம் பார்க்க நினைக்கிறார் ஒரு காவல் அதிகாரி.அவர் நேரடியாகச் செய்யவியலாது
லக்கிமேன் என்று பெயர் இருக்கும்போதே இது அதிர்ஷ்டம் சம்பந்தமான கதையாக இருக்கும் என நீங்கள் நினைத்திருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று புலம்பிக்கொண்டேயிருக்கும் யோகிபாபுவுக்கு திடீரென ஒரு அதிர்ஷ்டம். அடி நிலையிலிருந்து மேலே செல்கிறார். பலூனில் காற்றுப் போனது போல திரும்பவும் கீழே வருகிறார். இவற்றுக்கிடையில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதைச்
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் விஜய். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்படத்தில் நவீன தொழில்நுட்பத்தில்
ஆகஸ்ட் 28,2023 அன்று லைகா நிறுவனம் வெளியிட்ட ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.அதில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டிருந்தது. நடிகர் விஜய் சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய், கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு கனடா சென்று திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்பு மற்றும் திரைப்படத்தொழில்நுட்பங்கள்
சிம்பு நடிப்பில் மார்ச் 30 ஆம் தேதி வெளியான படம் பத்து தல.இப்படத்துக்குப் பிறகு, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. ‘எஸ்.டி.ஆர். 48’ என்று சொல்லப்படும் அந்தப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து
தொலைக்காட்சி நடிகராக மக்களுக்கு அறிமுகமானவர் கவின்.பின்பு, திரைப்பட உதவி இயக்குநரானார்.அதன்பின் நடிகராக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் அறிமுகமானது.இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில் வலம்வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. இதனால்,நடிகர் கவினுக்கென தனி இரசிகர் வட்டம் மட்டுமல்லாமல்,
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். லைகா





















