கவின் திருமண வரவேற்பு – 150 பிரபலங்கள் பேர் பங்கேற்பு
தொலைக்காட்சி நடிகராக மக்களுக்கு அறிமுகமானவர் கவின்.பின்பு, திரைப்பட உதவி இயக்குநரானார்.அதன்பின் நடிகராக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் அறிமுகமானது.இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில் வலம்வருகிறார்.
அவர் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. இதனால்,நடிகர் கவினுக்கென தனி இரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில், ஒரு படம் மற்றும் இயக்குநர் இளன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துவருகிறார்.
இவற்றில் இளன் இயக்கும் படத்தின் பெயர் இன்று மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரைக் காதலித்து வந்தார். இரகசியமான இவர்களின் காதல் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமாகியிருக்கிறது.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை,கவின் மோனிகா திருமணம், பார்க் ஹயாத் நட்சத்திர விடுதியில் நடந்தது.இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் சுமார் ஐம்பது பேர் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திரைத்துறையினர் கலந்து கொண்ட திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 27 ஆம் தேதி) நடந்தது.
மகாபலிபுரம் சாலையிலுள்ள ரேடிசன் ப்ளூ நட்சத்திர விடுதியில் வரவேற்பு நிகழ்வு நடந்துள்ளது.இந்நிகழ்வுக்கு
திரைத்துறையில் அவருக்கு நெருக்கமான 150 பேர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்ததாம்.அழைப்பு இல்லாதவர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிகழ்வில், நடிகர்கள் சிவகார்த்திகேயன்,ஹரிஷ்கல்யாண் உள்ளிட்ட சில நடிகர்களும், இயக்குநர்கள் லோகேஷ்கனகராஜ், அட்லி, நெல்சன்,இளன்,சதீஷ் உள்ளிட்ட பல இயக்குநர்களும் கலந்து கொண்டுள்ளனர்.











