சினிமா செய்திகள்

வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா – உருவாகும் புதிய படம்

இயக்குநர் வெற்றிமாறன் இப்போது சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் மற்றும் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படம் ஆகியனவற்றை இயக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் இன்னும் தொடங்கவில்லை. எப்போது தொடங்கும் என்கிற தகவலும் இல்லை.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் புதியபடமொன்று உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அந்தப்புதிய படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவிருக்கிறாராம். அவருக்கு இணையாக படத்தில் இன்னொரு நாயகன் போல நடிக்கவிருப்பவர் இயக்குநர் பாரதிராஜா.

பிரபல எழுத்தாளரின் பழைய சிறுகதை ஒன்றை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அரசியல் பின்புலம் கொண்ட அந்தக்கதைக்கு தற்காலத்துக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்களாம்.சமகால அரசியல் விமர்சனங்கள் அழுத்தமாக இப்படத்தில் இடம்பெறும் என்றும் சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கவிருப்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள்.

Related Posts