புதிய பொறுப்பேற்றிருக்கும் ஞானவேல்ராஜா
சூரயா, கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல பெரிய நடிகர்களை வைத்துப் படங்கள் தயாரித்த நிறுவனம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.
இந்நிறுவனம் தற்போதும் பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியா முழுக்க கிளை பரப்பியிருக்கும் ஜீ தொலைக்காட்சி நிறுவனம், இப்போது நேரடியாக இணையதளத்தில் (ஓடிடி) வெளியிடும் வகையில் படங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.
அதோடு அப்படங்களை திரையரங்குகளில் வெளியிடும் முயற்சியிலும் அந்நிறுவனம் இறங்கியிருக்கிறதாம்.
நேரடியாக அவர்களே திரையரங்குகளில் வெளியிடவியலாது என்பதால் தமிழகத்தின் விநியோகத் தலைவராக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவை நியமித்திருக்கிறார்களாம்.
அவர் தனியாகப் படங்கள்தயாரித்துக் கொண்டிருந்தாலும் இப்படி ஒரு பொறுப்பு கிடைத்ததும் தயங்காமல் ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.
தமிழகத்தில் ஞானவேல்ராஜா போல் இந்திப்படங்கள் விநியோகத் தலைவராக நடிகர் ஆர்யாவின் மாமனார் பொறுப்பேற்றிருக்கிறாராம்.
இதனால் இனிவரும் காலங்களில
நல்லபடங்கள் தயாரித்தால் அவை உடனே வியாபாரமாகிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
ஞானவேல்ராஜாவுக்குத் தெரிந்தவர்களாக இருந்தால் வியாபாரம் இன்னும் எளிதாகிவிடும்.











