சினிமா செய்திகள்

விஜய்யை நான்தான் காப்பாற்ற வேண்டும் – அட்லி பேச்சால் அதிர்ச்சி

விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கியது. ஐந்துநாட்கள் மட்டுமே நடந்து முடிந்தது. 
அப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு மே 5 ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம்.

இப்படத்துக்கு அடுத்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அப்படம் தொடங்கும் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது அதில் மாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் சொன்ன கதையில் விஜய்க்குத் திருப்தி இல்லை என்பதால் அதில் பல திருத்தங்கள் செய்யச் சொல்லியிருக்கிறாராம். இதனால் அது தாமதமாகலாம் என்கிறார்கள்.

இதனால் இதற்கடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தை முதலில் தொடங்கத் திட்டமிடுகிறார்களாம். 

அதாவது தெலுங்குப் படம் முடிந்ததும் அட்லி இயக்கும் படத்தைத் தொடங்க நினைக்கிறார்களாம்.
இது தொடர்பாக அட்லியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். 

அப்போது, சம்பளம் தொடர்பான பேச்சுகள் வந்தபோது, தயாரிப்பு நிறுவனம் அதிர்ந்து போகும் வகையில் மிகப்பெரிய சம்பளம் கேட்டிருக்கிறார் அட்லி. 

அதோடு, பீஸ்ட் படத்தால் விஜய்யின் பெருமை குறைந்திருக்கிறது. நான் தான் விஜய்யைக் காப்பாற்ற வேண்டும் எனவே எனக்கு இந்தச் சம்பளம் கொடுத்தாக வேண்டும் என்று கேட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அட்லியின் இந்தப் பேச்சால் தயாரிப்பு நிறுவனம், விஜய் உட்பட அனைவரும் அதிர்ந்து போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts