சினிமா செய்திகள்

துபாயில் இசைவிழா உலகெங்கும் பயணம் – கமலின் அதிரடி திட்டங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் படம் ‘விக்ரம்’. இப்படம் வெளீயீட்டுக்குத் தயாராகியுள்ளது. ஜூன் 3 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து பெரிய வசூல் படமாக மாற்ற வேண்டும் என்பதில் கமல் தீவிரமாக இருக்கிறாராம்.

இதற்காக இப்படத்தின் இசை வெளீயீட்டு விழாவை துபாயில் நடத்தவிருக்கிறார்களாம். மே முதல்வாரத்தில் இசைவிழாவை நடத்தத் திட்டமிட்டு வருகிறார்களாம்.

அதுமட்டுமின்றி இசைவெளீயீட்டு விழா முடிந்த பின்பு படம் வெளியீடு வரை உலகின் பல நாடுகளுக்கும் சென்று விக்ரம் படத்தை விளம்பரம் செய்யவிருக்கிறாராம் கமல்.

ஆர் ஆர் ஆர், கேஜிஎஃப் போன்ற பிறமொழிப்படங்கள் இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் வசூல் செய்கிறது. இவற்றிற்கெல்லாம் முன்பாக இந்திய திரைப்படம் உலகத் திரைப்படம் என்கிற முயற்சிகளை எடுத்தவர் கமல்.

பட வசூலைப் பொறுத்தே அது வெற்றி அல்லது தோல்வி என்று கணக்கிடப்படுவதால் இதுவரை கமல் தோல்விகளையே சந்தித்துள்ளார். எனவே, இந்தப்படத்தை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து அதைவிடப் பெரிய வசூல் காட்டிவிடும் முனைப்பில் இருக்கிறாராம் கமல்.

நடந்தால் நல்லதுதான்.

Related Posts