சினிமா செய்திகள்

அஜீத் 62 படத்தின் கதை இதுதான்?

அஜீத்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ்சிவன் இயக்கவிருப்பதாகவும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும் மார்ச் 18,2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதை குறித்து திரையுலக வட்டாரத்தில் பேசப்படுவது யாதெனில்…

சிறு நகரமொன்றில் சிறிய அளவில் உணவு விடுதி தொடங்குகிறாராம் அஜீத். அது படிப்படியாக வளர்ந்து சரவணபவன் போல் கிளைகள் பரப்புகிறதாம். இதனால் கோபமடையும் பன்னாட்டு உணவு நிறுவனங்கள் அஜீத் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி அவரை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடுகிறார்களாம்.

அதன்பின், அவர்களுக்கு எதிராகப் போராடி இழந்த பெயர் புகழ் ஆகிய அனைத்தையும் மீட்பதோடு பன்னாட்டு உணவு நிறுவனங்களால் எவ்வளவு சுகாதாரக் கேடுகள் மற்றும் நோய்கள் உருவாகின்றன என்பதை மக்களிடம் அம்பலப்படுத்துகிறாராம்.

உணவு சம்பந்தப்பட்ட கதை எல்லோர் மனதுக்கும் நெருக்கமாக இருக்கும் என்பதால் அஜீத் இதை ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.

அஜீத் 62 ஆவது படம் பற்றி உலவும் இந்தக்கதை உண்மைக்கதையா? இல்லையா? என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால்தான் உண்மை தெரியும்.

Related Posts