விக்ரம் நடித்த இரண்டு படங்களைக் கைப்பற்றிய கலைஞர் தொலைக்காட்சி
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்,துருவ்விக்ரம்,பாபிசிம்ஹா,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் மகான். இப்படம் நேரடியாக அமேசான் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
அதற்கடுத்து விக்ரம் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்ஃபான்பதான் உள்லிட்ட பலர் நடிக்கும் அந்தப்படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இப்போது அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இவ்விரண்டு படங்களையும் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார்.
இவ்விரு படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளதாம்.
இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்து ஒப்பந்தம் கையெழுத்தாகவிருக்கிறதாம்.
இவ்விரு படங்களுக்கும் சேர்த்து பதினைந்து கோடி ரூபாய் விலை என்று சொல்லப்படுகிறது.
கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் இப்போது புதிய படங்களின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிக் கொண்டிருப்பதால் திரைத்துறையினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.











