சினிமா செய்திகள்

அனிருத் வேண்டாம் – அலறும் இயக்குநர்

ரஜினிகாந்தின் 168 ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம்,விஸ்வாசம் ஆகிய படங்களின் இயக்குநர் சிவா இயக்கவிருக்கிறார்.

இதுகுறித்த அறிவிப்பு மட்டும் வெளியாகியிருக்கிறது.
 
அந்தப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஜோதிகாவும் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் உலவுகின்றன.

அதுமட்டுமின்றி இப்படம் தொடர்பாக உஅல்வும் இன்னொரு தகவல் இருக்கிறது. அது என்னவென்றால்,

இந்தப்படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் ரஜினி தரப்பிலும் சொல்லப்பட்டதாம்.

ஆனால் இயக்குநர் சிவாவோ அனிருத் வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகச் கூறப்படுகிறது.

அஜீத்தை வைத்து சிவா இயக்கிய வேதாளம், விவேகம் ஆகிய இரு படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அப்போதே அனிருத் மீது சிவாவுக்கு அதிருப்தி ஏற்பட்டதாம்.தேவைப்படும் நேரத்தில் அவரைத் தொடர்பு கொள்ளவே முடியாது. அவர் நினைத்தால்தான் தொடர்பு எல்லைக்குள் வருவார் என்பதால் அனிருத் மீது கடும் அதிருப்தியில் இருந்தாராம் இயக்குநர் சிவா.

அதனால்தான் விஸ்வாசம் படத்துக்கு இமானை இசையமைப்பாளராக்கினார் என்று சொல்கிறார்கள்.

இந்நிலையில் இப்போது மீண்டும் அனிருத்தை வைத்துக் கொள்ளவேண்டும் என்கிற கோரிக்கை வந்ததையும் சிவா நிராகரித்திருக்கிறார் என்கிறார்கள்.

அவரை சமாதானம் செய்து அனிருத்தை இசையமைப்பாளராக்கும் முயற்சி நடக்கிறதாம். 

என்ன நடக்கும்? என்கிற கேள்விக்கு, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போதுதான் சரியான விடை கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

Related Posts