உதயநிதி மகிழ்திருமேனி படத்தில் இணைந்திருக்கும் முக்கியப் புள்ளி
கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் மு.மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.இப்படங்களின் படப்பிட்ப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு புதியபடத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.
கொரோனா கால ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்கிறார்கள்.
இந்நிலையில் இந்தப்படம் நாட்டின் பொருளாதாரச் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் அதற்கான தீர்வுகள் என மிக அழுத்தமான விசயங்களைப் பேசக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள்.
இதனால் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தின்போது பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சனுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறாராம் இயக்குநர் மகிழ்திருமேனி. அவர் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறதாம்.
திரைப்பட உருவாக்கத்தில் திறமையாளரான மகிழ்திருமேனியுடன் பொருளாதார ஆலோசகர் ஜெயரஞ்சன் இணைந்திருப்பதால் இப்படம் மிகவும் பேசப்படக்கூடிய படமாக இருக்கும் என்கிறார்கள்.











