சினிமா செய்திகள்

நம்ம வீட்டுப் பிள்ளை ரிலீஸ் தேதியை அறிவிக்காதது ஏன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் நம்ம வீட்டுப் பிள்ளை. பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆனால் இன்றுவரை அந்தத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு செய்தித்தாள் விளம்பரங்களும் வரவில்லை.

இதனால் செப்டம்பர் 27 ஆம் தேதி அந்தப்படம் வெளியாகுமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. நம்ம வீட்டுப் பிள்ளை வெளியீட்டுத் தேதியை அறிவியுங்கள் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இதுகுறித்து விசாரித்தால்,

அந்தப்படம் செப்டம்பர் 27 இல் வெளியாவது உறுதி என்றும் அப்படத்துக்கு இன்னும் தணிக்கைச் சான்றிதழ் பெறவில்லை என்பதால் தேதியை அறிவிக்காமல் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதைவிட முக்கியமாக, செப்டம்பர் 20 அன்று வெளியாகவிருக்கும் சூர்யாவின காப்பான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது.
 
இப்போதே நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் விளம்பரங்களைத் தொடங்கினால் காப்பான் படத்துக்கு இடையூறாக இருக்கும் என்பதால் சன் நிறுவனம், நம்ம வீட்டுப் பிள்ளை வெளியீட்டுத் தேதியைக் கூட அறிவிக்காமல் இருக்கிறது என்கிறார்கள்.

Related Posts