சினிமா செய்திகள் நடிகர்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் வந்தா ராஜாவாத்தான் வருவேன்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படம் வெளியாக வேண்டுமென்றால், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக சிம்பு ரசிகர்கள்
விஷாலை திட்டி வீடியோ வெளியிட்டு வந்தார்கள்.அதன்பின், சிம்பு தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “ரசிகர்கள் செய்தது தவறு. அதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அதே வேளையில் எவ்வித பிரச்சினையுமின்றி பொங்கலுக்கு படம் வெளியாகும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் மகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அவருடன் சிம்பு மற்றும் சுந்தர்.சி உள்ளிட்டோர் அதில் பேசியுள்ளார்கள்.

அப்போது, ரசிகர்கள் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பாடல்கள் குறித்து என்று சிம்புவிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சிம்பு “பாடல் என்பதால் ஒரு சூப்பர் விஷயம் சொல்கிறேன்.எனக்கா ரெட் கார்டு… எடுத்துப் பாரு என் ரெக்கார்டு’ என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகும். இப்பாடலை நான் எழுதவில்லை. இசையமைப்பாளர் ஆதி எழுதியிருக்கிறார். அவர் ரொம்ப மோசமான பையன். ஆனால், சூப்பராக மியூசிக் பண்ணியிருக்கார். பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

எனக்கா ரெட் கார்டு என்ற வரிகள் தயாரிப்பாளர்
தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்களை கிண்டல் செய்வது போன்ற தொனியில் இருப்பதால்,
சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

அதேசமயம் சிம்பு ரசிகர்கள், இது சரியான பதிலடி என்று தெரிவித்து வருகிறார்கள்.

பெயர் குறிப்பிட விரும்பாத சங்க நிர்வாகி ஒருவர், சிம்பு சொன்னபடி பாடல் வர்கள் அமைந்திருந்தால் அதுபற்றி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Posts