Uncategorized

பாலாவின் வர்மா பட நிகழ்ச்சி இரத்தானது ஏன்?

பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நாயகனாகவும் மேகா எனும் புதுமுகம் நாயகியாகவும் நடிக்கும் படம் வர்மா.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா செப்படம்பர் 22 அன்று வேலூரிலுள்ள ஒரு பெரிய கல்லூரியில் நடப்பதாக இருந்தது.

அந்நிகழ்வு இரத்தாகிவிட்டது. அதற்குக் காரணம்?

கல்லூரி அரங்கில் திரைப்படம்
சம்பந்தப்பட்ட விழா நடக்கக்கூடாது என்கிற கருத்து வலுவடைந்ததால் நிகழ்ச்சி இரத்தானது என்கிறார்கள்.

அப்படி இல்லை, நாயகன் துருவ்வின் பிறந்தநாள் செப்டம்பர் 23 எனவே அந்த நாளில் அவரை ஊடகங்கள் முன் அறிமுகப்படுத்துவதும் படத்தின் முதல்பார்வையை வெளியிடுவதும் பொருத்தமாக இருக்கும் என்பதால் 22 ஆம் தேதி நிகழ்வை இரத்து செய்துவிட்டு 23 ஆம் தேதி சென்னையில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts