சினிமா செய்திகள் நடிகை

ரசிகர்களுக்கு ஓவியா எழுதிய திடீர் கடிதம்

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ சார்பில் மதுரை.ஆர்.செல்வம் தயாரித்துள்ள படம் ‘சீனி’. இதில் அறிமுக நாயகர்கள் சஞ்சய், பரத்ரவி இருவருடன் ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார்.

‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிப் பெண் நிருபராக வரும் ஓவியா மற்றும் சஞ்சய், பரத்ரவி ஆகியோருடன் ராதாரவி, செந்தில், ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், கஞ்சாகருப்பு, சின்னிஜெயந்த், வையாபுரி, ரவிமரியா, தாஸ், டி.பி.கஜேந்திரன், மனோஜ் குமார், பாவாலட்சுமணன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், மீரா கிருஷ்ணன், புவனா உள்பட பலர் நடித்துள்ளனர்.

சீதா என்ற யானையும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளது. அதன் பாகனாக காமெடி நடிகர் செந்தில் பாத்திரம் ஏற்றுள்ளார். பவர் ஸ்டார் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இசை- ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்- சினேகன், விவேகா, நடனம்- ராதிகா, பாரதி, சண்டை பயிற்சி- -பவர் பாஸ்ட் பாபு, படத்தொகுப்பு-சாய் சுரேஷ், ஒளிப்பதிவு-நாகராஜன், தயாரிப்பு-மதுரை ஆர்.செல்வம், எழுத்து, இயக்கம்-ராஜதுரை.

சீனி படத்துக்கு சென்சாரின் ‘யு’ சான்றிதழ் மற்றும் தரமான படமெனும் பாராட்டு கிடைத்துள்ளது.

இந்தப்படம் தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த மாதம் இந்தப் படத்தை வெளியிடும் வேலைகள் நடக்கின்றன. இப்போது படத்தின் நாயகி ஓவியா, பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டதால் படத்தின் பெயரையே ஓவியாவ விட்டா யாரு என்று மாற்றிவிட்டார்கள்.

இம்மூன்று சொற்களில் உள்ள முதல் எழுத்துகளைச் சேர்த்தால் அதுவும் ஓவியாதான்.

இப்படம் அடுத்த மாதம் வெளியிடப்படுவதை ஒட்டி, ரசிகர்களுக்கு ஓவியா எழுதியுள்ள கடிதத்தில், அன்பார்ந்த தமிழ் ரசிகப் பெருமக்களே, என்னை உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும் அன்பையும் ஆதரவையும் பெற்றேன். இப்போது நான் நடித்து வெளிவர இருக்கும் ஓவியாவ விட்டா யாரு (சீனி) படத்தினைக் கண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி நீங்கள் வெற்றியைத் தேடித்தந்தீர்களோ அதுபோல இந்தப்படத்துக்கும் உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Related Posts