ஓவியாவின் செல்வாக்கைச் சொல்லும் புதியபடம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் அவருடைய பெயரைப் பலரும் பயன்படுத்துகின்றனர்.
கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘ஓவியா’ ென்று பெயர் வைத்திருக்கிறார்.
அப்படத்தின் முதல்பார்வையை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ.சதீஸ்குமார் வெளியிட்டார்.
புதுமுக இயக்குநர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். எடிட்டிங் – சூர்யா நாராயணன்.
காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாக நடிக்கிறார்.
இந்த ‘ஓவியா’ திரைப்படம் அனைத்து வயதினரையும் கவரும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
ஓவியா என்கிற பெயர் காரணமாகவே படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.











