சிம்பு மீது குற்றம் சொல்லாதீர்கள் – இயக்குநர் வேண்டுகோள்
அரசன் என்கிற படத்தில் நடிக்க வாங்கிய தொகையை வட்டியோடு செலுத்த வேண்டும் இல்லையென்றால் சிம்பு வீடு ஜப்தி என்கிற நீதிமன்ற உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் நாராயண் கூறியிருப்பதாவது…
நான், மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தை முடித்து இரண்டாவதாக ஒரு கதை தயார் செய்தேன். இக்கதைக்கு சிம்புதான் சரியான நடிகர் என்று தோன்றியதால்சிம்புவை வைத்து இயக்கவேண்டும் என்று சிம்புவிடம் சென்றேன்.
சந்திப்பிற்காக அனுமதி கேட்ட மறுநாளே என்னை சந்தித்து முழுக்கதையையும் கேட்டார். அதன் பிறகு அவரின் ஆர்வம் இக்கதையின் மீது அதிகமாக இருந்ததால் பல ஆலோசனைகள் கொடுத்தார்.
அரசன் ஒரு தலைவரின் கதை என்பதால் அதை நேர்த்தியாக செய்ய காலம் கொஞ்சம் அதிகமாகவே தேவைப்பட்டது அதேபோல் பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் என்றாலும் தயாரிப்பாளரும் கதைமீது நம்பிக்கை கொண்டார்கள்.
தயாரிப்பாளர் மற்றும் சிம்பு இருவருமே எனக்கு பக்க பலமாக இருப்பதால் நான் நம்பிக்கையோடே சில வருடங்கள் பயணித்தேன்.
ஆனால் ஏதோ ஒன்றால் காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று எண்ணி நான் வேறுகதை தயார் செய்ய சென்றேன் விரைவில் அழைப்பார்கள் நான் இப்படத்தை ஆரம்பிப்பேன் என நம்பி இருந்தேன்.
இருவருமே நல்வர்கள் ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று என்னால் யோசிக்கவே முடியவில்லை…
ஆனால் சிம்புவை மட்டும் எல்லோரும் குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை
அவர் மிகச்சிறந்த மனிதர் எங்களுக்கு இக்கதையின் உருவாக எல்லா நேரங்களிலும் பக்க பலமாக இருந்தார்
காலம் இரண்டு நல்ல மனிதர்களை வெவ்வேறு துருவத்தில் நிறுத்திப் பார்க்கிறது..
என் படம் ரிலீஸ் ஆகி நல்லபடம் என பெயர் வரும் என்றிருந்த எனக்கு நீதிமன்றம் மூலம் என் படத்தின் பெயர் வெளிவருவது மிகப்பெரிய வருத்தம்தான்…
ஆனால் என் வாழ்நாளில் ஒருபடமேனும் சிம்புவுடன் பணிபுரிவேன். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட என்கிறார் நம்பிக்கையாக.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











