தடுமாறிய தனுஷ் கை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா
தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார்.
இப்படங்களைத் தொடர்ந்து அவர் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டாராம்.
கடைசி நேரத்தில் அவர் விலகியதால் தடுமாறிப்போனாராம் தனுஷ்.
அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைப்பது? என்று தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில், எஸ்.ஜே.சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரை அணுகியிருக்கிறார்கள்.
அவரும் ஒரு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் தனுஷின் தடுமாற்றத்தைப் புரிந்துகொண்டு இந்தப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டாராம்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.











