எதிர்பாரா வெற்றி – ஆனந்தக்கண்ணீர் விட்ட டிராஜேந்தர்
இச்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் நேற்று (டிசம்பர் 22 ) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு, தொடர்ந்து மூன்று முறை தலைவராக இருந்த அருள்பதி தலைமையிலான அணிக்கும்,டி.ராஜேந்தர் தலைமையிலான அணிக்கும் போட்டி இருந்தது.
இவற்றில், டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அருள்பதிக்கும் அவருக்குமான வித்தியாசம் 12 வாக்குகள்.
மேலும் இத்தேர்தலில், செயலாளர் பதவிக்கு டி.மன்னன் (239 வாக்குகள்),பொருளாளர் பதவிக்கு பாபு ராவ் (258 வாக்குகள்),துணைத் தலைவர் பதவிக்கு பங்களா சீனிவாசலு (232 வாக்குகள்)
துணைச் செயலாளர் பதவிக்கு K.காளையப்பன் (226 வாக்குகள்)
ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.











