சினிமா செய்திகள்

தனுஷின் என்னை நோக்கிப் பாயும் தோட்டா தணிக்கை நடந்தது

கெளதம்மேனன் இயக்கத்தில தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கிறது.

இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை படத்தின் தயாரிப்பாளர் மதன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டிருந்த டிவிட்டர் செய்தியில், ஓரிரு நாட்களீல் படம் தணிக்கை செய்யப்பட்டுவிடும்.காத்திருப்புக்கு ஏற்ற சிறந்த படமாக இருக்கும் என்று அவர் கூறீயிருந்தார்.

இந்நிலையில் இன்று (15.02.2019) அப்படத்தின் தணிக்கை நடைபெற்றதாகவும் அதில் படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts