சினிமா செய்திகள்

ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திட்டமிடப்பட்ட இந்தப் படம், கொரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரத்துக்கு முன்னதாக பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு.

இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில், அதையும் ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் முடிக்க திட்டமிட்டுள்ளது.

தீபாவளி வெளியீடு என்று முன்பே அறிவித்திருந்தாலும், கொரோனா தாமதத்தால் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

தற்போது ‘அண்ணாத்த’ தீபாவளியையொட்டி நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் எனவும், விரைவில் படத்தின் முதல்பார்வை வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரஜினி இரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

Related Posts