செய்திக் குறிப்புகள்

விஜய் அஜீத்தை இயக்கிய எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

விஜய்,அஜீத்,பிரபுதேவா,ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரை இயக்கிய எழில் இப்போது ஜி.வி.பிரகாஷை இயக்கவிருக்கிறார்.

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ்.பி.பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தைத் தொடங்கி உள்ளார்கள்.

பிப்ரவரி 15 அன்று எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது.

இப்படத்துக்கு சி.சத்யா இசையமைக்கிறார்.
மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படம் இயக்குநர் எழில் பார்முலா படி முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படவிருக்கிறதாம்.

இப்படம் ஜி.வி.பிரகாஷுக்குப் பெரும் பலமாக அமையும் என்கிறார்கள்.

Related Posts