உதய் சார் நடிப்பு சூப்பர் – விஜயசேதுபதி பாராட்டு
சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கண்ணே கலைமானே’. இப்படம் இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் படத்தைப் பார்த்துவிட்டு விஜய்சேதுபதி நெகிழ்ச்சியுடன் மனம் திறந்து கூறியதாவது,
இயக்குனர் சீனு ராமசாமி சார் இயக்கத்துல, உதயநிதி ஸ்டாலின் சார் நடிச்ச கண்ணே கலைமானே படம் பார்த்தேன். இது ரொம்ப அன்பான, அழகான ஒரு திரைப்படம்.
நல்ல இன்பர்மேஷன் இருக்கு. அன்பைப் பத்தின அழகான பார்வை இந்த படம். உதய் சார் சூப்பரா நடிச்சுருக்காரு. நான் பர்ஸ்ட் டைம் அவர இப்படி பாக்குறேன். ரொம்ப நிதானமா, ரொம்ப அழகா நடிச்சுருக்கார்.
தமன்னாவா இருக்கட்டும், வடிவுக்கரசி அம்மா, ‘பூ’ ராமு சாரா இருக்கட்டும். எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சுருக்காங்க. ரொம்ப நல்ல படம், அழகான வசனம். ரசிச்சு பார்க்க வேண்டிய ரொம்ப அழகான திரைப்படம் கண்ணே கலைமானே. மிஸ் பண்ணாம தியேட்டர்ல வந்து பாருங்கள்
இவ்வாறு விஜய்சேதுபதி பாராட்டியுள்ளார்.











