சூர்யா 42 படக்குழு அதிரடி முடிவு – சார்ந்தோர் மகிழ்ச்சி
சூர்யாவின் 42 ஆவது படம், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படம் ஆகிய பெருமைகளுடன் தயாராகிக் கொண்டிருக்கும் படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார்.
தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
வரலாற்றுக்காலம் மற்றும் தற்காலம் ஆகியனவற்றோடு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
பத்து மொழிகளில் தயாராகிறது என்று சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.
திட்டமிட்டதைவிட மேலும் இரண்டு மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நீடிக்கிற நிலை உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதோடு திரைக்கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவாம்.
இவற்றின் காரணமாக இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடும் முடிவை எடுத்திருக்கிறார்களாம். இப்போது அதற்கேற்ப படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள்.இதனால் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படம் சார்ந்தோர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.
ஒரு நன்னாளில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.











