சினிமா செய்திகள்

விஸ்வரூபம் தயாரிப்பாளரின் விபரீத முடிவு – கொதிக்கும் திரையுலகம்

கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் நேற்று ( ஆகஸ்ட் 10 ஆம் தேதி) வெளியானது.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய திரைப்பட விநியோக மையங்கள் உள்ளன.

இவற்றில் முக்கியமான இரண்டு மையங்களான மதுரை, தென் ஆற்காடு ஆகிய விநியோக மையங்களில் விஸ்வரூபம் 2 படம் வெளியாகவில்லை.

உலகம் முழுவதும் வெளியான இந்தப்படம் இந்த இரண்டு இடங்களில் மட்டும் வெளியாகாதது ஏன்?

இப்படத்தைத் தயாரித்திருக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம், ஏற்கெனவே பல படங்களை வெளியிட்ட வகையில் விநியோகஸ்தர்களுக்குப் பெரும்தொகையைத் திருப்பித் தரவேண்டியிருந்ததாம்.

இப்படம் வெளியாகும் நேரத்தில் அந்தத் தொகையைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டிருந்ததாம் அந்த நிறுவனம்.

கடைசி நேரம்வரை இவ்விரு பகுதிகளுக்காகக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்து விடுவதாகச் சொல்லிவிட்டு பணத்தைத் தராமலே விட்டுவிட்டார்களாம்.

பணம் கொடுக்காமல் படம் வெளியாகாது எனும் நிலை நீடித்ததால் அவ்விரு பகுதிகளில் படத்தை வெளியிடுவதில்லை என்று தயாரிப்பாளரே முடிவெடுத்துவிட்டாராம்.

இதனால், மதுரை அழகர், சவுத் சுந்தர் ஆகிய இரு விநியோகஸ்தர்களுக்குத் தர வேண்டிய சில கோடிகளைத் தராமல் விட்டுவிடலாம் என்பது தயாரிப்பாளரின் கணக்காம்.

அடுத்த படத்தை எடுத்தால்தான் மீண்டும் விநியோகஸ்தர்களிடம் போய் நிற்க வேண்டும். அதுவரை ஒன்றும் சிக்கல் இல்லை என்பதால் தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்தாராம்.

இது மிகவும் விபரீதமான முடிவு என்றும், ஒரு வியாபாரத்தில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச நேர்மை கூட இல்லாமல் அந்நிறுவனம் நடந்துகொண்டது என்றும், இது ஆரோக்கியமானது அல்ல என்றும் இது மேலும் பல சிக்கலகளைத் தொடங்கிவைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts