February 12, 2025
சினிமா செய்திகள்

சூர்யா 40 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தொடர்ந்து தனுஷ் படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் தனுஷ் நடித்த ‘அசுரன்’.  மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக அதன் தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.

‘அசுரன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் இந்தியத் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 ரஜினி, ஷாரூக் கான், விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வெற்றிமாறன் சந்தித்துப் பேசினார். இறுதியில் விஜய்யுடன் படம் பண்ணுவதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், வெற்றிமாறன் அடுத்து இயக்கவிருப்பது சூர்யாவை என்பது உறுதியாகியுள்ளது.
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவருடைய ட்விட்டரில்,
அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்
வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் @theVcreations தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சூர்யா அடுத்து ஹரி இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் வெற்றிமாறன்.
இருவரும் அந்தப் படங்களை முடித்துக் கொண்டு இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts