சினிமா செய்திகள்

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அடுத்த படம் – பிரபல இயக்குநருடன் இணைகிறார்

விஜயகாந்த்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன். இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் படம் மூலம் தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாகக் காலடி எடுத்துவைத்தார்.

அதன்பின் அவர் நடித்த மதுரவீரன் படம் 2018 ஆம் ஆண்டு வெளியானது.

இவற்றிற்கு அடுத்து தமிழன் என்று சொல் என்கிற படத்தில் நடிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அப்படம் நடக்கவில்லை.

மித்ரன் என்றொரு படம் தொடங்கப்பட்டது. அதுவும் ஒரு கட்டத்துக்கு மேல் நகராமல் இருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் சீனுராமசாமி சண்முகபாண்டியனை நாயகனாக்கி அடுத்த படத்தை எடுக்கவிருக்கிறாராம்.
இதற்காக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் சீனுராமசாமி.சண்முகபாண்டியன் உட்பட அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் அது மிகவும் பிடித்துவிட்டதாம்.

படத்தை விஜயகாந்தின் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறதாம்.இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 

Related Posts