சினிமா செய்திகள்

தனுஷ் சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி படங்களுடன் சர்வதேச திரைப்பட விழா

59 நாடுகளிலிருந்து 150 படங்கள் திரையிடப்படும் 16 வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது.

இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ், தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

16th Ciff (9)

16th Ciff (9)

இத்திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களின் போட்டிப் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட விண்ணப்பங்கள் ஊடகம் வாயிலாக அக்டோபர் 7ம் தேதி அனுப்பப்பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டு, அதன் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட 20 தமிழ்ப் படங்களில் இருந்து தேர்வுக் குழுவினர் 12 படங்களைத் தேர்வு செய்தனர்.

இவ்விழாவில் கலந்து கொள்ள தமிழ்ப் படங்கள் 16 அக்டோபர் 2017 முதல் 15 அக்டோபர் 2018 தேதிக்குள்ளாக படம் தணிக்கை செய்ய்ப்பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள்,

தனுஷின் வடசென்னை,
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்,
விஜய்சேதுபதியின் 96,
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்,
விஷாலின் இரும்புத்திரை,
அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள்,
விஷ்ணு விஷாலின் ராட்சசன்,
அட்டகத்தி தினேஷின் அண்ணனுக்கு ஜே,
பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிய அபியும் அனுவும்,
சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ்,
மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள்

ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவற்றுடன் மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்புத்திரையிடலில் இடம்பெறுகிறது.

இவ்விழா கலைவாணர் அரங்கத்தில் (டிசம்பர் 13, 2018, 6:15 மணி) தொடங்குகிறது.

16 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பம்சங்கள்

முதல் திரைப்படம் – கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி’ஆர் வென்ற |ஷாப் லிப்டர்ஸ்” (ஜப்பான்)

போட்டியிடும் தமிழ்ப் படங்கள் – 12

இந்திய பனோரமா: 12 படங்கள் (“தி சவுண்ட் ஸ்டோரி – இந்திய ப்ரிமியர் படம் உட்பட)

சிறப்புத் திரையிடல் – மேற்கு தொடர்ச்சி மலை (தமிழ்)

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக:

1) ஸாம்பியா – ஒரு படம் (தெற்கு ஆப்பிரிக்கா)

இன்னும் பல வித்தியாசமான படங்களுடன் திருவிழா தொடங்குகிறது.

Related Posts