சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் கமல் கெளதம்மேனன்

கமல் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாகத் தடை பட்டிருக்கிறது. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து தலைவன் இருக்கிறான் என்றொரு படத்தில் நடிக்கப்போவதாகவும் அதுவே கடைசிப்படமாக இருக்கலாம் என்றும் கமல் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இவ்விரு படங்களைத் தாண்டி இன்னொரு படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல் ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த படம் வேட்டையாடு விளையாடு. கமலின் பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த அந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சி குறித்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்களாம்.

இதற்காக கெளதம் மேனன் கமல் ஆகிய இருவரும் கலந்து பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். 

Related Posts