சினிமா செய்திகள்

விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் படங்களுக்குப் புதிய சிக்கல்

விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் துக்ளக் தர்பார்.

டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.

இத்தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துவருகிறது.

ஆனாலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவே சொல்கிறார்கள்.

அதில் ஒரு சிக்கல் இருப்பதால் பேச்சுவார்த்தை வெற்றியடையவில்லையாம்.

என்ன சிக்கல்?

இப்படம் தயாராகிக் கொண்டிருக்கும்போதே இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சிக்குக் கொடுத்துவிட்டார்களாம்.

அப்போது, இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லி ஒப்பந்தம் போட்டார்களாம்.

இப்போது திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட முடிவெடுத்திருப்பதால் ஒப்பந்தப்படி சன் தொலைக்காட்சியிடம் தடையில்லாச் சான்று பெறவேண்டுமாம். அதற்கான வேலைகளில் தாமதம் ஏற்படுவதாலேயே அடுத்தகட்டத்துக்கு நகராமல் அப்படியே நிற்கிறதென்கிறார்கள்.

இதே சிக்கல் காரணமாகத்தான் சிவகார்த்திகேயனின் டாக்டர் படமும் நேரடியாக இணையத்தில் வெளியிடும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts