சினிமா செய்திகள்

விஜய் 65 படத்திற்கான அரங்கம் அமைக்கும் பணி திடீர் நிறுத்தம் – காரணம் என்ன?

விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் அந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.

அடுத்து சென்னையிலேயே சுமார் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.

இதற்காக சென்னையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தது.

ஒரு மிகப்பெரிய வணிகவளாகம் (ஷாப்பிங் மால்) போன்ற அரங்கம் அமைக்கப்படுகிறதாம். அந்த அரங்கத்தில்தான் நாற்பது நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

பலகோடி செலவில் அவ்வளவு பெரிய அரங்கு அமைப்பதற்கும் அதில் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கும் காரணம் இருக்கிறதாம்.

படத்தின் மையக்கதை ஒரு வணிகவளாகத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. உண்மையான வணிக வளாகங்களில் படமாக்கினால் நினைத்தது போல் எடுக்கவியலாது என்பதால் தனியாக அரங்கம் அமைக்கிறார்களாம்.

அந்த அரங்கில் மே 3 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடக்கும் என்று சொல்லியிருந்தார்கள்.

ஆனால் சொன்னபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.

கொரோனா சிக்கல் பெரிதாக இருப்பதால் இப்போதைக்கு படப்பிடிப்பு வேண்டாம் என்று விஜய் சொல்லிவிட்டாராம்.

அதேசமயம் அரங்கம் அமைக்கும் வேலை நடந்துகொண்டிருந்ததாம்.

விசயமறிந்த விஜய், அந்த வேலைகளையும் நிறுத்தச் சொல்லிவிட்டாராம்.அரங்கம் அமைக்கும் பணியில் நிறையப் பேர் வேலை செய்வதால் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் வேலைகளை நிறுத்தச் சொல்லிவிட்டதாகத் தகவல்.

படப்பிடிப்பு எப்போது என்பதைத் தெரிந்து கொண்டு அரங்கம் அமைக்கலாம் என்றும் சொல்லிவிட்டார்களாம்.

இதனால் விஜய் 65 படத்தின் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு காலவரையறையற்று தள்ளிப்போயிருக்கிறது.

Related Posts