சினிமா செய்திகள்

இப்படி ஒரு தலைப்பா? தளபதி 64 பட அப்டேட்

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய்.

விஜய் நடித்துவரும் இந்தப் படம், ‘தளபதி 64’ என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். தவிர, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரித்துவருகிறார்.

இப்படம் குறித்த சமீபத்திய தகவல் என்னவென்றால், தளபதி 64 படத்துக்கு ‘டாக்டர்’ என தலைப்பு வைக்க இருப்பதாக ஒரு செய்தி இணையத்தில் உலாவருகிறது. ஏனெனில், மருத்துவ ஊழல்கள் மற்றும் நீட் குறித்து இப்படம் பேசுகிறதாம். தலைப்பு குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டில் குறித்த தகவல்களை புத்தாண்டு அன்று வெளியிட இருக்கிறது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கான முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில், தற்பொழுது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது.

Related Posts