விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படம் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.இப்படம் விஜய்யின் 68 ஆவது படம். இதற்கடுத்து விஜய் நடிக்கவிருக்கும்,
இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் 2023 செப்டம்பர் ஏழாம் தேதி வெளியானது. அப்படம் வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட பிறகும் அட்லீயின் அடுத்தபடம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. ஆனாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த பல செய்திகள் உலாவந்து கொண்டேயிருக்கின்றன. ஜவான் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கும் புதியபடத்தில் விஜய்
தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அவருடைய ஐம்பதாவது படம்.இந்தப்படத்துக்கு ராயன் என்று பெயர் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார். இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கிக் கொண்டிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து ரஜினியின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஆகியோர் சண்டைப்பயிற்சி
ரஜினிகாந்த் நடித்து வெளியாகி வெற்றி பெற்றுள்ள ஜெயிலர் திரைப்படம் அவருடைய 169 ஆவது படம். அதற்கடுத்து அவருடைய 170 ஆவது படமான லால்சலாம் படத்தை அவர் மகள் ஐஸ்வர்யா இயக்க லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறதென்றும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வந்துகொண்டிருந்தன.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் வெற்றிநடை தொடர்கிறது. இந்தப்படம்
காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தின் தோல்வி காரணமாக இயக்குநர் முத்தையாவுக்கு அடுத்த படம் அமைவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அந்தப்படத்துக்கு அடுத்து அருண்விஜய்யைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அப்படத்துக்கு அருண்விஜய் மற்றும் இயக்குநர் முத்தையா ஆகியோர் கேட்ட சம்பளம் காரணமாக அது நடக்கவில்லை. அதன்பின், ஏற்கெனவே சன் பிக்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் வசூலில் மட்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது என்கிறார்கள். தமிழ்நாடு
ஒரு நேர்மையான காவல் அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதனால் சிறைக்கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்பு தானுண்டு தன் குடும்பமுண்டு என அமைதியாக வாழந்து கொண்டிருக்கிற அப்பா வெகுண்டெழுகிறார். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் ஜெயிலர்.மகனாக வசந்த்ரவியும் அப்பாவாக ரஜினிகாந்த்தும் நடித்திருக்கிறார்கள். ரஜினியின் தோற்றமும் உடைகளும் அவருக்கு மரியாதை
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.இந்தப்படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூலை 28)