சினிமா செய்திகள்

ரஜினி வில்லன் சிவகார்த்திகேயன் நாயகன் – லோகேஷ்கனகராஜ் பட வியப்பு

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170 ஆவது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கிக் கொண்டிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

இதையடுத்து ரஜினியின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றுகின்றனர்.இந்தப்படத்துக்கும் அனிருத் இசையமைப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

அயலான் படம் வெளியாவதையொட்டி சிவகார்த்திகேயன் நேர்காணல்களில் பங்கேற்றார். அப்போது லோகேஷ்கனகராஜ் – ரஜினி படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, அது எனக்கே தகவல்தான் என்று பதில் சொல்லியிருந்தார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை அவர் உட்பட யாரும் சொல்லமாட்டார்கள் என்பதுதான் எதார்த்தம்.

இந்நிலையில்,அப்படம் குறித்து இன்னொரு பரபரப்பான தகவல் உலவிக்கொண்டிருக்கிறது.

அது என்னவெனில்?

இப்படம் இருபெரும் கதாபாத்திரங்களைக் கொண்டது.திரைக்கதையில் இரு கதாபாத்திரங்களுக்கும் சம அளவு முக்கியத்துவம் இருக்குமென்று சொல்லப்படுகிறது. அவற்றிலொன்று எதிர்மறைச் சாயல் கொண்ட பாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

அப்படியானால் அந்த எதிர்மறைக் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகிறார் என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த எதிர்மறை வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாராம். நேர்மறை வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் உலவுகிறது.

பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான படமாக உருவாகவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இது முடிந்ததும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் வருவார்.

அதற்குள், த.செ.ஞானவேல் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினி வருவார். இருவரும் தயாரானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் கதாநாயகன் ரஜினிகாந்த் வில்லன் என்கிற இந்த அதிகாரப்பூர்வமற்ற தகவல் அதிகாரப்பூர்வ தகவலாக மாறுமானால் மிகப்பெரிய விசயம்தான்.

Related Posts