ஒரு பேய்பங்களா, இரண்டு மூன்று குழுக்கள்,ஆபத்தான ஒரு விளையாட்டு அதாவது வென்றால் பரிசு தோற்றால் மரணம் என்கிற விளையாட்டு ஆகியனவற்றை வைத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதைதான் டிடி ரிட்டர்ன்ஸ். இதில் கதையை விட நகைச்சுவைதான் அதிகமிருக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த்.
ஆர் கே என்டர்டெயின்மென்ட் இரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ‘இவன் வேற மாதிரி’, ‘வேலையில்லாப் பட்டதாரி’ புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா,
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படம் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தின் இரண்டாம்பாகமான தில்லுக்கு துட்டு 2, 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையும் ராம்பாலாவே இயக்கியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டது. இம்முறை ராம்பாலா இயக்கவில்லை. அவரிடம் பணியாற்றிய பிரேமானந்த் என்பவர் இயக்கியிருக்கிறார்.
விஜய்சேதுபதி அடுத்து சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சந்தானம் இன்னொரு கதாநாயகன் போல் நடிக்கவிருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம்ரவி ஆர்யா உட்பட பலர் நடிப்பில் சங்கமித்ரா என்கிற படம் உருவாகும் என்று சொல்லப்பட்டது. இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்த தேனாண்டாள் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் சிக்கியதால் அது நடக்கவில்லை. இப்போது
தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் அஜீத்தின் 62 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. இதுதொடர்பாக அந்நிறுவனம்,2022 மார்ச் 28 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்… அஜீத்தின் 62 ஆவது படத்தை நாங்கள் தயாரிக்கிறோம் என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறோம்.அந்தப்படத்தை விக்னேஷ்சிவன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சார்பாக இப்படத்தின்
சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். இப்படத்தை ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இயக்கியிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.அந்தப் படத்தின் தமிழாக்கம்தான் ஏஜெண்ட் கண்ணாயிரம். ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் நடிகை ரியா
2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தின் கதைக்கருவை மையமாகக் கொண்டு தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் படம்,ஏஜெண்ட் கண்ணாயிரம். இந்தப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா
சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் ஆனந்த்தின் தம்பி ஓம் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப்படத்துக்கு டி.இமான்
பல ஆண்டுகளாக வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானம் இப்போது, பிரபல நிதியாளரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை
நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலுகுலு படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கடுத்து அவர் நடித்துள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட சில படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. இவற்றிற்கடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. அதேசமயம், அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கிறதாம். பிரபல



















