விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி உட்பட பல படங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு திரையுலகில் இது இருபத்தைந்தாவது ஆண்டு. அதையொட்டி அந்நிறுவனத்தை உருவாக்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..
ரெட்டச்சுழி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் தாமிரா, சுமார் எட்டு வருட போராட்டங்களுக்கு பிறகு ‘ஆண் தேவதை’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பல கடுமையான போராட்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு ஒருவழியாக இந்தப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸானது. படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்தப்படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதது மற்றும்
வடசென்னை படத்தில் நடிகர் பவனின் தம்பி சிவாவாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் பாவல் நவகீதன். அப்படத்தில் நடித்த அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்…. எனக்கு என் அப்பாவைப் போலவே பத்திரிகையாளராக வரவேண்டும் என நினைத்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒளிப்பதிவாளராக ஆகவேண்டும் என்ற ஆசை வந்தது. எனது ஊர் செங்கல்பட்டு. அங்கு தான் பள்ளிப் படிப்பை முடித்தேன். படிப்பு ஏறவில்லை. ஆனால்
கணவன் வேலைக்குப் போய்ப் பொருளீட்டிவர, மனைவி வீட்டுவேலைகள் செய்து குடும்பம் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது நம் சமுதாயத்தின் எழுதப்படாத சட்டம். அதைத் தூக்கிப் போட்டுடைத்து நான் ஹவுஸ்ஹஸ்பண்ட் என்று பெருமையாகச் சொல்லும் சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தைப் படைத்தமைக்காகவே இயக்குநர் தாமிராவுக்கு ஒரு பூங்கொத்து. மனைவி டேப்லெட்டில் மேய்ந்துகொண்டிருக்க காய்கறி நறுக்கிக்கொண்டே
ரெட்டச்சுழி படத்தை தொடர்ந்து இயக்குனர் தாமிரா டைரக்சனில் உருவாகியுள்ள படம் ‘ஆண் தேவதை’. சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்துள்ள இந்தப்படத்தை தனது ‘சிகரம் சினிமாஸ்’ நிறுவனத்துடன் ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள்
நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி, பணம் ,பதவி, மற்றும் ஆடம்பர வாழ்வை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் உறவுகளின் மேன்மையை எடுத்துச் சொல்கிற படம் அறுபது வயது மாநிறம். அல்சைமர் எனும் நினைவிழத்தல் குறைபாட்டில் சிக்கிய அப்பாவைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற அமெரிக்கக் கனவு காணும் மகனை வைத்துக் கொண்டு கதை சொல்கிறார்கள். நினைவிழத்தல் குறைபாட்டால் பாதிக்கப்படும் அப்பாவாக
ஆகஸ்ட் 24 அன்று வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. திரைத்துறையினரும் அப்படத்தை மனமாரப் பாராட்டுகிறார்கள். ஆணதேவதை பட இயக்குநர் தாமிரா அப்படத்தைப் பற்றிக் கூறியிருப்பதாவது…. இத்தனை இயல்பான கதையை,மனிதர்களை நிலக்காட்சியை தமிழ்த்திரை இதுவரை கண்டதில்லை. படத்தில் நடித்திருந்த அத்தனை மனிதர்களும் திருக்குறளைப் போல அளவாக,செறிவாக
ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் ஆண் தேவதை குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ரம்யா பாண்டியன்.. “ஜோக்கர் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டிய சமுத்திரக்கனி சார் தான், ‘ஆண்
ஊரில் பெரிய மணியகாரர் குடும்பம், ஊருக்கே சோறு போட்ட அக்குடும்பத்துக்கு தற்போது, வீட்டின் கதவு, சன்னல்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலை. இதற்கு என்ன காரணம்? இப்படி ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதிலிருந்து மீள்வது எப்படி? ஆகியனவற்றுக்கான விடைதான் இப்படம். மகன் உமாபதியை கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காக அப்பா தம்பிராமையா எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், நகைச்சுவை, காதல்,
விக்ரம்பிரபு நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. கலைப்புலிதாணு தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கும் புதியபடம் அறுபது வயது மாநிறம். இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனியும் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோதி பண்ணா சாதாரண மைகட்டு என்கிற படத்தின் தமிழாக்கம்தான்























