தனுஷ் நடித்த 3 படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷே சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுத்தார். சிவகார்த்திகேயன் படங்களின் தொடர் வெற்றி காரணமாக அவருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் அமைந்தது. 2018 டிசம்பரில் தனுஷ் நடித்த மாரி 2
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை நாங்குநேரி இடைத்தேர்தல் பரப்புரையில் இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் படம் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு முகநூலில் அவர் இட்டிருக்கும் பதிவு… அசுரன் #Asuran – படம் மட்டுமல்ல
தமிழ்த்திரையுலகின் உச்சநட்சத்திரங்கள் ரஜினி, கமல், விஜய் ஆகியோர். ரஜினி நடிக்கும் தர்பார், கமல் நடிக்கும் இந்தியன் 2, விஜய் நடிக்கும் விஜய் 64 ஆகிய படங்களின் இசையமைப்பாளர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் அனிருத். இன்று இருபத்தொன்பது வயதை நிறைவு செய்யம் இவர் தன்னுடைய 21 ஆவது வயதில் தமிழ்த் திரையுலகுக்குள் இசையமைப்பாளராக நுழைந்தார். இவருடைய முதல்பாடல் ஒய் திஸ் கொலவெறி. உலக
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது…. அனைத்து ஊடக நண்பர்களுக்கும்.. எங்கள் மகிழ்வான வணக்கம். எங்கள் இதயங்களில் நிறைவும், உதடுகளில் புன்னகையும்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் படம் வெளியான நாள் முதலே பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.
இந்தியில் புகழ்பெற்ற நடிகர் ஷாருக்கான்.இவர் நடித்த இந்திப்படங்களான உயிரே, சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில படங்கள் தமிழிலும் குரல்மாற்று செய்யப்பட்டு வெளியானது.அதனால் தமிழக ரசிகர்களுக்கும் இவர் பரிச்சயம். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது, #AskSRK என்கிற குறிச்சொல் போட்டு அதில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பார். அதன்படி, இன்று (அக்டோபர் 8) காலையில் தனது
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்று கருணாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டது என்று அவரே நன்றியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…. அசுரன் – பிரிப்பவன் அல்ல;
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படியிருந்தும் இடம்பெறும் வசனங்கள், முக்குலத்தோர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கருணாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்….., கலைப்புலி
வெக்கை எதார்த்தமாகப் பிறந்ததுதான். பெரிய பின்னணி எதுவும் கிடையாது. நானறிய நடந்த கதை. பசுமையான இலையைப் பூச்சி கொறித்தது போல் ஒரு சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களைக் கோர்த்து அவனது மனவெக்கையுடன் சொல்லனுமென்று ரெம்ப நாளாக எனக்குள் ஒரு துடிப்பு. மலங்காடு, மயானம், கண்மாய், அய்யனார் கோயில் என்று நான் சுற்றித் திரிந்த எனது இளமைக்கால அனுபவங்களைக் கொலைச் சம்பவத்துடன்
தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்குகிறார் கெளதம் மேனன். இவற்றில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட வேலைகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய படமொன்றை




















