சினிமா செய்திகள்

அசுரத்தனம் காட்டிய தனுஷ் – பா.இரஞ்சித் பாராட்டு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் படம் வெளியான நாள் முதலே பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்த்திரையில் அசுரன்கள் கதையை நிகழ்த்திக் காட்டிய இயக்குநர் வெற்றிமாறன், தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டியிருக்கும் தனுஷ், நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு மற்றும் இத்திரைப்படக் குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள்!! உரக்கச் சொல்லுவோம்! நிலமே எங்கள் உரிமை!!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Posts