பிகில் – நள்ளிரவு வரை நீண்ட சிக்கல்
விஜய் நடித்த பிகில் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் சிறப்புக்காட்சிகள் அதிகாலை 5 மணிக்காட்சி திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அரசு விடுமுறை நாட்களில் மட்டும்தான் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என்றும் இன்று வேலைநாள் என்பதால் சிறப்புக்காட்சிக்கு அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு சொல்லிவிட்டது.
சிறப்புக்காட்சி என்பதால் ஒரு நுழைவுச் சீட்டுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாம். இதனால் ஒரு காட்சியிலேயே பல கோடி வசூல் ஆனதாம்.
இந்நிலையில் அரசாங்கம் அனுமதி மறுத்ததால் அதிர்ந்த பட நிறுவனம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரிடம் முறையிட்டு கடைசி நேரத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.
இதற்காக அவர்களுக்கு சில கோடிகள் கொடுக்கப்பட்டதாகவும் பேச்சு இருக்கிறது.
எப்படியோ நள்ளிரவு பணிரெண்டு மணியளவில் எல்லாம் சுமுகமாகி அதிகாலைக் காட்சிகள் ஐந்தேகால் மணிக்கு திரையிடப்பட்டன.
இதனால் பெரும்தொகை கொடுத்தேனும் படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அனைத்து ரசிகர்களும் உற்சாகமாகப் படம் பார்த்தனர்.










