சினிமா செய்திகள்

விஜய் படத்தின் பெயரில் புதுப்படம் – கெளதம் மேனன் அதிரடி

தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்குகிறார் கெளதம் மேனன். 

இவற்றில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட வேலைகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. 
துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புதிய படமொன்றை எவ்வித அறிவிப்புமின்றித் தொடங்கியிருக்கிறார் கெளதம் மேனன். அப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கிறதாம்.

அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் பப்பி படத்தின் நாயகன் வருண் தான் கெளதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் நாயகன். 
அப்படத்துக்கு ஜோஷ்வா அதிகாரம் ஒன்று எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யை வைத்து யோஹன் அதிகாரம் ஒன்று என்கிற படத்தைத் தொடங்குவதாக கெளதம் மேனன அறிவித்தார்.

அறிவிப்போடு நின்று போனது அந்தப்படம்.

இப்போது அந்தப் பெயரை நினைவு படுத்தும் வகையில் எடுக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை அறிவிப்பின்றி நடத்திக் கொண்டிருக்கிறார் கெளதம் மேனன்.

Related Posts