யோகிபாபுவுக்குப் பதவி உயர்வு
யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நால்வரும் இணைந்து நடிக்கும் படம் “காவி ஆவி நடுவுல தேவி”. இப் படத்துக்கு வசனம் எழுதி புகழ்மணி இயக்கி உள்ளார்.
மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளதாம்.
இப்படத்தில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.இவர்களோடு சிவசங்கர், வேல்சிவா.ரிஷா.சிவகாமி,வாணி, டக்ளாராமு இன்னும் பலர் நடிக்கின்றனர்.
கதாநாயகனுக்கு ஆலோசனை சொல்லும் வகையில் நடித்துக் கொண்டிருந்த யோகிபாபுவுக்கு இப்படத்தில் பதவி உயர்வு. காதலைச் சேர்த்து வைக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் வந்து நகைச்சுவையை அள்ளித் தெளித்திருக்கிறார்.
நான் கடவுள் ராஜேந்திரனும், அவருக்குத் துணையாக மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் மேலும் கலக்கும். தம்பி ராமையா வரும் காட்சிகள் அனைத்தும் அதிரடி காமெடியாக இருக்கும் என்கிறார்
இப்படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன்.
இப்படத்துக்கு சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும்,ஒளிப்பதிவை கணேசனும், படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும் செய்கிறார்கள்.
பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் ஆகிய இருவரும் எழுதுகிறார்கள்.
நடனப் பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர்.
இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.











