செய்திக் குறிப்புகள்

ராகவாலாரன்ஸ் நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அவருடைய தயாரிப்பில் ஒரு படம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்…

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்துப் படங்களுமே வெற்றிவாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. அந்தப் படங்களின் மூலம் குழந்தைகளாக இருப்பவர்கள் முதல்கொண்டு பெரியவர்களையும் குழந்தைகள் மனநிலைக்குக் கொண்டு சென்று ரசிக்கச் செய்த பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு.

பேய்ப் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ்.அவர் அடுத்ததாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் ” துர்கா “.இப்படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் ” ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன் இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் ” அதிகாரம் ” படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts