சினிமா செய்திகள்

சுரேஷ்காமாட்சி தயாரிக்கும் ஐந்துபடங்கள் – விவரம்

மாநாடு படத்தைத் தொடர்ந்து அதன் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஐந்து படங்களைத் தயாரிக்கிறார். அவற்றில் முதல்படமாக ராம் இயக்கத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ஜீவி2 படம் அறிவிக்கப்பட்டு அதன் படப்பிடிப்பும் நடந்துகொண்டிருக்கிறது.

இவற்றிற்கடுத்து பாலாஜிசக்திவேல் இயக்கத்தில் சாண்டி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமொன்று தொடங்கப்படவிருக்கிறதாம்.

அதைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராணாடகுபதி கதாநாயகனாக நடிக்கும் படமொன்றின் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

இவற்றிற்கு நடுவில் சுரேஷ்காமாட்சியே இயக்கும் படம் ஒன்று தொடங்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சுரேஷ்காமாட்சி ஏற்கெனவே சில படங்களைத் தயாரித்திருந்தாலும் அவை வணிகரீதியாக வெற்றி பெறவில்லை. மாநாடு என்கிற ஒரு படம் வணிகரீதியாக வெற்றி பெற்றவுடன், ஐந்து படங்களைத் தயாரிக்கும் தெம்பு வந்துவிட்டதா? என்றால், இந்த ஐந்து படங்களையும் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துக் கொடுப்பதுதான் இவராம்.

இப்படங்களுக்கான முதலீடு செய்வது, இணையத்தில் திரைப்படங்களை வெளியிடும் ஒரு பெரிய நிறுவனம் என்கிறார்கள்.

எப்படியோ தமிழ்த்திரையுலக்கு நல்ல படங்கள் கிடைத்தால் நல்லதுதான்.

Related Posts