சிம்பு நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிம்பு இப்போது வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படப்பிடிப்பில் இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பின் கிருஷ்ணா இயக்கும் பத்துதல படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இவை மட்டுமின்றி கெளதம்மேனன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது சிம்பு நடிக்கும் இன்னொரு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதன்படி, சிம்புவின் ்அம்மா உஷாராஜேந்தர் தலைவராகவும் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் கெளரவ ஆலோசகராகவும் உள்ள தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக புதிய படம் ஒன்றில் சிம்பு நடிக்கவுள்ளார்.
இந்தப்படத்தை அச்சங்கத்தின் துணைத்தலைவர் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.
ஞானகிரி எனும் புது இயக்குநர் இயக்குகிறார்.
இப்படத்தில் நாயகியாக ரகுல்பிரித்சிங்கும் மலையாள நடிகர் ஜெயராம், தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.