சினிமா செய்திகள்

வலிமை படம் குறித்த இருவேறு கருத்துகள் – படக்குழு அதிர்ச்சி

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

மே 1 ஆம் தேதி அஜித்தின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல்பார்வை வெளியாகும் என்றும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், முழுமையான குரல்பதிவு மற்றும் பின்னணி இசை இல்லாமல் தயாராகியிருக்கும் படத்தை அஜீத்,எச்.வினோத் உள்ளிட்ட சிலர் மட்டும் பார்த்திருக்கிறார்கள்.அவர்களோடு மிகச்சிலரும் படம் பார்த்தார்களாம்.

படம் மிகவும் புத்திசாலித்தனமாக இருப்பதாகச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார்கள். அதேநேரம், படத்தில் என்ன சொல்கிறார்கள்? என்பதே புரியவில்லை என்கிற கருத்தும் வந்திருக்கிறது.

இதனால் படக்குழுவுக்குப் பதட்டம் ஏற்பட்டிருக்கிறதாம்.

படம் க்ளாஸா இருக்கு என்று சொல்லி வெகுமக்கள் நிராகரித்துவிடும் அபாயம் ஏற்பட்டுவிடுமோ? என்கிற அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறதாம்.

இதனால் படத்தொகுப்பில் சில மாற்றங்கள் செய்ய்த் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளீயிடவும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

Related Posts