சினிமா செய்திகள்

சார்ஜாவில் விஜய் 65 முதல்கட்டப் படப்பிடிப்பு – விவரங்கள்

விஜய் 65 என்றழைக்கப்படும் விஜய்யின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசைய்மைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படத்தில் நாயகியாக பூஜாஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கெனவே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் பற்றிய அறிவிப்பு டிசம்பர் 10,2020 அன்று வெளீயானது.

இப்படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள டாகடர் படம் மார்ச் 26 இல் வெளீயாகும், அதன்பின் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கலாம் எனத் திட்டமிட்டனர்.

ஆனால், திட்டமிட்டபடி டாக்டர் படம் வெளியாகவில்லை. அப்படம் மே 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டாக்டர் படம் சொன்னபடி வெளியாகவில்லை என்பதற்காக விஜய் 65 படப்பிடிப்பில் மாற்றம் செய்யவில்லை. முந்தைய திட்டப்படியே விஜய் 65 படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

ஏப்ரல் 2 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.சென்னையில் தொடக்கவிழா நடத்தி ஓரிருநாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு சார்ஜா செல்லவிருக்கிறார்களாம்.

அங்கே பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். அதை முடித்துக் கொண்டு திரும்பிவந்த பின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு குறித்து முடிவாகும் என்கிறார்கள்.

Related Posts