சினிமா செய்திகள்

தக் லைஃப் படக்கதையும் விஜய் 69 படக்கதையும் ஒன்றா? – பரபரப்பு தகவல்

நடிகர் விஜய்யின் 69 ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார் என்றும் அப்படத்துக்கு பெங்களூருவை மையமாகக் கொண்ட கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யவிருக்கிறது.அப்படத்தை முதல்பிரதி அடிப்படையில் தி ரூட் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதியே இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் நடக்கவில்லை.

அதற்குக் காரணம் விஜய்யின் சம்பளம் பற்றிய பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியவில்லை என்று சொல்லப்பட்டது. விஜய் சம்பளமாக சுமார் 215 கோடி கேட்டார்கள் என்றும் ஆனால் அந்நிறுவனமோ சுமார் 175 கோடிக்கு மேல் கொடுக்கத் தயாராக இல்லை என்பதால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இழுபறி நீடிக்கிறது என்று சொன்னார்கள்.

இப்போது இன்னும் ஒரு புதிய சிக்கல் உருவாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.திரையுலகின் உள்வட்டத்தில் உலவும் இந்தத் தகவல் குறித்த முழு உணமை சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.ஆனாலும் இரண்டு தரப்பினரும் பரபரப்பாகப் பேசிக் கொள்ளும் விசயமாக அது இருக்கிறது.

அது என்ன?

இப்போது எச்.வினோத் எழுதி வைத்திருக்கும் கதை போலவே மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துக் கொண்டிருக்கும் தக் லைஃப் படத்தின் கதையும் இருக்கிறது என்பதுதான் அந்தப் புதிய சிக்கல்.

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.அதற்கு முன்னதாக அப்படத்தின் முதல்பாதியை முழுமையாக்கி குரல்பதிவு வரை செய்து வைத்திருக்கிறார் மணிரத்னம்.அந்த வேலைகளின் போது படத்தைப் பார்த்தவர்கள் சொன்ன விசயங்களை வைத்துத்தான் இது தன்னுடைய கதை என்பது இயக்குநர் எச்.வினோத்துக்குத் தெரிந்திருக்கிறது.

இதனால் கடும் அதிர்ச்சியான அவர்,இந்தக் கதை எப்படி அவருக்குத் தெரிந்தது? ஒருவேளை கமல் சாரே சொல்லிவிட்டாரோ? என்றெல்லாம் எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

இன்னொரு பக்கம்,மணிரத்னம், எச்.வினோத் ஆகிய இரண்டு இயக்குநர்களும் ஒரே வெளிநாட்டுப் படத்தைப் பார்த்து கதை,திரைக்கதை எழுதிவிட்டார்களோ? என்கிற ஐயமும் உடனிருப்பவர்களுக்கு இருக்கிறது.

இதுகுறித்து விஜய்யிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவித்து வரும் இயக்குநர் எச்.வினோத், தக்லைஃப் படத்தின் முழுமையான திரைக்கதையை அறிந்து கொண்டு முழுக்க ஒற்றுமையாக இருந்தால் தன்னுடைய திரைக்கதைக்கு வேறு வடிவம் கொடுக்கலாம் என்கிற முடிவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

விஜய் 69 ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

Related Posts